Tamil Department

தமிழ்த்துறை

தன்னிகரில்லாத தகத்தகாயத் தமிழை இவ்வுலகில் தாபிப்பதற்கு அறிஞர் பெருமக்களின் பெரு முயற்சியில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சிறுபங்களிப்பாய் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்றத்தின் வாயிலாக, நமது தாய் மொழியாய், செம்மொழியாய் விளங்குகின்ற தமிழ் மொழியின் மேன்மையை மென்மேலும் செழித்திட 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை திருவாரூர் மாவட்ட அளவிலான பள்ளிகளைச் சார்ந்த மாணவ,மனைவியர்களுக்கிடையே பேச்சுப் போட்டி ,கட்டுரை போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பெற்று அவற்றில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு

  • முதல் பரிசாக - 3000/- ரூபாய் பரிசுத்தொகையும்
  • இரண்டாம் பரிசாக - 2000/- ரூபாய் பரிசுத்தொகையும்
  • மூன்றாம் பரிசாக - 1000/- ரூபாய் பரிசுத்தொகையும்

இவற்றுடன் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்களும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எங்களது பங்களிப்பை அளித்து வருகின்றோம்.

  • மனித நேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
  • மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
  • பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
  • பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி.

இத்தகைய தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி சிறப்பித்தோடு,தமிழை உயிர்மூச்சாய், சுவாசமாய் கொண்டு வாழ்ந்து வரும் எங்களது ரஹ்மத் பள்ளியின் தாளாளர் உயர்திரு. எம்.ஏ.முஸ்தபா அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்த்துறை ஆசிரியபெருமக்கள் செவ்வனே செயலாற்றி வருகின்றோம் என்பதை மிகுந்த பெருமையோடும்,மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
  • வீழ்வது நாமாகிலும் ! வாழ்வது தமிழாகட்டும் !